விழி ஓ(ஈ)ரத்தில் நீ!
விழுதுகளற்ற மரங்கள்
வேறற்று வீழும்
விதி சுழற்றும் ஆழிக்காற்றில்
வேதனை நெஞ்சம்
விரக்தியடைந்து வீழும்
விழி சொடுக்கிய கடும் பார்வையில்
நினைவுகளற்ற நெஞ்சம்
நிழல் தேடிப் போகும்
நிரந்தரமற்ற உறவின் பிரிவில்
பார்த்துக் களித்ததொரு காலம்
பழகிச் சிரித்ததொரு நேரம்
கலந்து கிடந்ததொரு பருவம்
கலைந்து போனதிங்கே இதயம்!
உறங்காத இமைகள்
உன் நினைவைச் சொல்லும்
உண்ணாத பொழுதுகள்
உன் உயிரையே நாடும்
பிரிவுத் துயரம் தனிச் சொத்தல்ல
பிரிந்து போனவர்களின் பொதுச் சொத்து!
